ஆட்சி மாற்றம் வந்தால் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கம்பி எண்ணுவார்கள் : ஈவிகேஎஸ் ஆருடம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2023, 8:02 pm

தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியின் போது, தமிழ்நாடு தினத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், பிரதமர் மோடி எந்த வேலையும் செய்வதில்லை. தனக்கு பிடிக்காதவர்கள் மீது வருமானவரித்துறை, அமலாக்கத்துறையினரை ஏவுகின்ற பணியை மட்டும் தான் செய்து வருவதாக கூறினார்.

மேலும் தமிழக அமைச்சர்கள் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி தோற்கடித்து விடலாம் என நினைப்பதாகவும், அது தவறு என்கிற வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடி கைது நடவடிக்கை போல மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கம்பி எண்ணுவார்கள் என கூறினார். தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்வது என்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும் இதற்கு தமிழக அரசும், காவல்துறையும் அனுமதிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?