மாஸ்கோ இசைநிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 70 பேர் உயிரிழப்பு.. ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு.. பிரதமர் மோடி கடும் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
23 March 2024, 9:17 am

ரஷ்யாவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 70 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் மாஸ்சூகாவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் எனும் இசை அரங்கில் பிரபல இசைக்குழு நிகழ்ச்சியை நடத்தியது. இதில், சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.

இந்த நிலையில், அரங்கிற்குள் திடீரென ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல், கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், அரங்கிற்கு தீவைத்தும் தாக்குதலை நடத்தியது. இதனால், உள்ளே இருந்தவர்கள் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினர். மேலும், தீவிபத்தில் அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், “இந்த தாக்குதல் பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.100க்கும் மேற்பட்டோர் படுகாயமம் அடைந்துள்ளனர்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், துயரமான நேரத்தில் ரஷ்ய மக்களுக்கு இந்தியா தனது ஒற்றுமையையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்வதாகவும், மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய மக்களுக்கு இந்தியா தனது ஒற்றுமையையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

  • Vimal shares Kalavani movie experienceநடிகர் விமல் ஓவியாக்கு அண்ணனா…என்னங்க சொல்றீங்க ..பலருக்கு தெரியாத உண்மை தகவல்..!
  • Views: - 315

    0

    0