பேச பேச மேடையிலேயே கண்கலங்கிய பிரதமர் மோடி… சேலம் பொதுக்கூட்டத்தில் நெகிழ்ந்து போன தொண்டர்கள்..!!

Author: Babu Lakshmanan
19 March 2024, 2:33 pm

தமிழகத்தில் எனக்கு கிடைத்து வரும் ஆதரவை நாடே ஆச்சரியத்துடன் பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2வது நாளாக சுற்றுப்பயணம் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கோவையில் ரோடு ஷோவில் பங்கேற்ற அவர், இன்று சேலத்தில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜிகே வசான், ஏசி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மேடையில் பொன்னாடை போற்றிய ராமதாஸை பிரதமர் மோடி கட்டியணைத்து வரவேற்றார்.

தொடர்ந்து, மேடையில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது :- சேலம் புண்ணிய பூமியில் உள்ள சேலம் கோட்டை அம்மனை முதலில் வணங்குகிறேன். ஏப்ரல் 19ம் தேதி ஒவ்வொரு ஓட்டையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வழங்க தமிழகம் முடிவு செய்து விட்டது. நவீன கட்டமைப்புக்கு பாரதம் தன்னிறைவைப் பெற விவசாயிகள் பலனடைய, மீனவர்கள் பாதுகாப்புக்கு 400க்கும் மேல் பெற வேண்டும்.

தமிழகத்தில் எனக்கு கிடைத்து வரும் ஆதரவை நாடே ஆச்சரியத்துடன் பார்க்கிறது. பாஜகவுக்கு பெருகும் ஆதரவு திமுகவின் தூக்கத்தை கெடுத்து விட்டது. ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இலக்கு.

சேலத்திற்கு வரும் போது பழைய நினைவுகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. 40 ஆண்டுகளுக்கு முன் மானசரோவர் யாத்ரை சென்ற போது சேலத்தைச் சேர்ந்த ரத்னவேல் என் இளைஞர் என்னுடன் வந்திருந்தார்
சேலத்தின் பெருமைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அதன்மூலம் சேலத்தின் மீது எனக்கு ஈர்ப்பு உருவானது.

சேலம் ரத்னவேல் எனக்கு தமிழ் கற்றுத் தர முயற்சித்தார். அவர் இன்றைக்கு நம்முடன் இல்லை. எமர்ஜென்சி காலத்தில் சிரமங்களை எதிர்கொண்ட பல பள்ளிகளை சேலத்தில் திறந்த கேஎன் லட்சுமணனின் நினைவு வருகிறது. ஆடிட்டர் ரமேஷ் பாஜகவுக்காக கடினமாக உழைத்தவர், அவரை சமூக விரோதிகள் கொன்று விட்டனர். ஆடிட்டர் ரமேஷ் மரணம் குறித்து பேசிய போது பிரதமர் மோடி கண்கலங்கினார்.

மும்பையில் இண்டியா கூட்டணியின் முதல் கூட்டத்திலேயே அவர்களின் திட்டம் வெளியே வந்து விட்டது.
சக்தியை அழிக்க வேண்டும் என்பதே இண்டியா கூட்டணியின் திட்டம். தமிழ்நாட்டில் காஞ்சி காமாட்டி, மதுரை மீனாட்சி, குமரி அம்மன், சமயபுரம் மாரியம்மன் போன்ற சக்திகள் உள்ளன. சக்தியை அழிக்க நினைப்பவர்களை அந்த சக்தியே அழித்து விடும் ; சக்திகள் நிறைந்த பூமி தமிழகம்.

இந்து மதத்தில் சக்தியை எப்படி வழிபடுகிறோம் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்து தர்மத்திற்கு எதிரானது இண்டியா கூட்டணி. இந்து மதத்தை தவிர வேறு எந்த மதங்களையும் இண்டியா கூட்டணியினர் அவமதிப்பதில்லை. இந்து தருமத்தை அழிப்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக உள்ளது.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு விநாடி கூட வீணாக்காமல் இந்து தருமத்தை அவமதிக்கும் இண்டியா கூட்டணி. புனித செங்கோலை நாடாளுமன்றத்தில் நிர்மாணிப்பதை இண்டியா கூட்டணியினர் எதிர்த்தனர்.
ஏப்ரல் 19ம் தேதி உங்கள் வாக்குகளின் மூலம் சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கு அழிவை தாருங்கள்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது திமுகவினர் எப்படி இழிவாக நடந்து கொண்டனர் என்பது உங்களுக்கே தெரியும். நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு மசோதாவுக்கு இண்டியா கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்

தேசிய அரசியலில் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்க வேண்டிய மூப்பனாரை காங்கிரஸ் குடும்ப அரசியல் வளர விடவில்லை. திமுகவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது. ஒரு பக்கம் ஊழல், ஒரு பக்கம் குடும்ப ஆட்சியை நடத்துகின்றனர் திமுகவும், காங்கிரசும். mகாங்கிரஸை ஆட்சியில் இருந்து நீக்கிய பிறகே 5ஜி தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.

நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிக்கிறது. மதிய உணவு போன்ற நலத்திட்டங்களை வழங்கிய காமராஜர் எனக்கு உத்வேகம் அளித்த தலைவர். நாட்டில் 2 பாதுகாப்பு வழித்தடங்களை உருவாக்கி வருகிறோம். அதில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. தமிழகம் புதிய உயரத்திற்கு செல்லும் என்பது எங்கள் அனைவரின் உத்தரவாதம். 7 பெரிய ஜவுளி பூங்காக்களை உருவாக்கி வருகிறோம். தமிழகமும் அதில் பலனடையும். சேலம் பகுதியில் ரயில்வே கட்டமைப்புக்கு ரூ.260 கோடி செலவிடப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 312

    0

    0