மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி.
மதுரையில் நேற்று மாலை சிறுகுறு நடுத்தர தொழில்நிறுவனத்தினருடனான டிஜிட்டல் கருத்தரங்கில் பங்கேற்ற பிரதமர் மோடி, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இரவு சாமி தரிசனம் முடித்து, மதுரை பசுமலை பகுதியில் உள்ள கேட்வே தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.
இதனையடுத்து, தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தங்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு புறப்பட்டார். மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு புறப்பட்டார்.
மதுரை பசுமலை தனியார் தங்கும் விடுதியில் இருந்து பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் நிலையம் செல்வதற்காக திருப்பரங்குன்றம் சாலையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. 3500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பெரியார் பேருந்து நிலையம் முதல் விமான நிலையம் வரை சாலையோரங்களில் இருபுறமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, தங்கும் விடுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு செல்லும் பிரதமர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீர் குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதே போன்று குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ள 75 கலங்கரை விளக்கம், ரூ.1477 கோடி செலவில் முடிக்கப்பட்டு, உள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை, நாடு முழுவதும் ரூ.4 ஆயிரத்து 586 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதனிடையே, தூத்துக்குடி புறப்படுவதற்கு முன்பு, “பல்லடத்திலும், மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன். மகாராஷ்டிராவில் யவத்மாலுக்கு புறப்படும் முன்பு தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்,” என்று X தளத்தில் பதிவிட்டார் பிரதமர் மோடி.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.