கரூர் : ராகுல் காந்தியை பார்த்து பிரதமர் மோடி பயப்படுவதாகவும், 2024 மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் 5 கேள்விகளை கேட்டார். கேள்வி கேட்ட 2 நாளில் தீ போல நாடு முழுவதும் பரவியது. இதற்கு உதாரணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நடந்தது குறித்து கேட்டார். இந்திய பிரதமர், அதானி நிறுவனத்திற்கு மட்டும் தனிப்பட்ட முறையில் செயல்படுகிறார் என கேட்டார். துறைமுகம் தவிர வேறு எந்த துறையிலும் முன் அனுபவம் இல்லாத அதானி குழுமத்திற்கு அனைத்து துறைகளிலும் டெண்டர் எடுக்கிறார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி கேட்டார். மக்கள் பணத்தையும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளும் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 30 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. பாஜகவை சார்ந்தவர்கள் 3 இடங்களில் வழக்கு போடுகிறார்கள். நரேந்திர மோடியின் மீது ஊழல் குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசியதால், 2 ஆண்டு காலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று பி.ஜே.பி எம்.பி.க்கு நடந்துள்ளது. அவர் உச்சநீதிமன்றத்தில் சென்று தான் தண்டனை அறிவிக்கப்படுகிறது. பதவி பறிக்கப்படுகிறது.
ராகுல் காந்தியை பார்த்து மோடி பயப்படுகிறார். குலாம் நபி ஆசாத் இன்னும் அரசு வீட்டில் குடியிருக்கும் போது, ராகுல் காந்தியை மட்டும் திட்டமிட்டு ஒடுக்க நினைக்கிறார்கள். மிகுந்த உறுதியோடு இதனை எதிர்கொள்வோம். 1 மாதம் தொடர் போராட்டம் நடத்தினோம். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 1 லட்சம் வீடுகளில் “எனது வீடு ராகுல் வீடு” என ஸ்டிக்கர் ஒட்டும் பணியிணை தொடங்கி இருக்கிறோம். 2024 மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும், என்றார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.