சென்னை விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி ; வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்த பாஜக தொண்டர்கள்!!

Author: Babu Lakshmanan
8 April 2023, 4:10 pm

ரூ.2,467 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவி, மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர், சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

பிரதமரை வரவேற்க அவர் செல்லும் பகுதிகளில் எல்லாம் பா.ஜ.க. சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பிரதமர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இடங்களின் அருகே திரண்டனர்.

விழா முடிந்து ஐஎன்எஸ் அடையார் ஹெலிபேட் தளத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்கிறார். வழிநெடுகிலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

மாலை 4 மணியளவில் சென்டிரல் எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தை வந்தடையும் பிரதமர் மோடி, சென்னை – கோவை ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு சென்று, மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 369

    0

    0