மதுரை ஆதினத்தை வழிமறித்த பாதுகாவலர்கள்… காரை நிறுத்தி பிரதமர் மோடி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..!!
Author: Babu Lakshmanan28 February 2024, 10:53 am
மதுரையில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு சென்ற போது தன்னை பார்க்க வந்த ஆதினத்தை பாதுகாவலர்கள் தடுத்த போது, பிரதமர் மோடி செய்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
மதுரை உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி தனியார் விடுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் கூட்டம் கூட்டமாக தொண்டர்கள் வரவேற்பு அளித்த போது, அதில் மதுரை ஆதினமும் கையில் பொன்னாடையோடு நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரை அனுமதிக்காமல் பாதுகாவலர்கள் தடுத்தனர்.
இதனை பார்த்த பிரதமர் மோடி, மதுரை ஆதீனத்தை அனுமதிக்குமாறு சொல்லி, அழைத்து நலம் விசாரித்தா. அப்போது, சால்வையை பிரதமர் மோடிக்கு அணிவித்து மதுரை ஆதினம் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை ஆதினம், “நான் மோடி அவர்களை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இலங்கைப் பிரச்சனையை தீர்க்க வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதியே மீட்டு தர வேண்டும். தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்றும் நான் தமிழில் கோரிக்கை வைத்தேன். எனக்கு ஹிந்தி தெரியாது என்பதனால், அவர் என்னிடம் நன்றாக இருக்கின்றீர்களா என்று கேட்டார்.
நான் பொன்னாடை போற்றினேன், மற்ற பிரதமரை விட இவர் முக்கியமானவர் பாதுகாப்பு கருதி, என்னை பாதுகாவலர்கள் அருகில் விடவில்லை. அவர் வர சொன்னதில் நான் சென்றேன். வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும்.
மீண்டும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தான் வருவார் என்று அவரிடம் கூறினேன் மகிழ்ச்சி அடைந்தார். ஆன்மீகப் பிரதமராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று ஆதீனம் கூறினார்.
0
0