‘நல்லா இருக்கீங்களா இபிஎஸ்’… திமுக அமைச்சர்களை கடந்து சென்று எடப்பாடியாரின் தோளை தட்டிக்கொடுத்து நலம் விசாரித்த பிரதமர் மோடி..!!

Author: Babu Lakshmanan
26 May 2022, 6:10 pm

தன்னை வரவேற்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கைகளை பிடித்து தோளை தட்டிக் கொடுத்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி சுமார் ரூ.31,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். பிரதமர் வருகையையொட்டி, 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

முதலில் ஆளுநர் ஆர்.என். ரவி சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சால்வை அணிவித்து பிரதமரை வரவேற்றார். அவரைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் துரை முருகன் மற்றும் பொன்முடி ஆகியோர் வணக்கம் தெரிவித்து பிரதமரை வரவேற்றனர். அவர்களுக்கு பிரதமர் வெறும் வணக்கத்தை மட்டும் தெரிவித்து விட்டு, அப்படியே நகர்ந்து சென்றார்.

ஃப்ரொட்டகால் படி அடுத்தடுத்த வரிசையில் நின்று கொண்டிருந்த முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்றார். அப்போது, அவரை கண்டு நெகிர்ந்து போன பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியின் கைகளை பிடித்து, தோளை தட்டிக் கொடுத்து நலம் விசாரித்தார்.

சிறிது நேரம் எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய பிரதமர் மோடி, அதன் பின் நகர்ந்து சென்று தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரின் வரவேற்பை பெற்றார். இதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனையும் தட்டிக்கொடுத்து நலம் விசாரித்தார்.

என்னதான், ஆளும் கட்சியான திமுக அமைச்சர்களின் வரவேற்பை வழக்கமான முறைப்படி பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டாலும், தங்களது கூட்டணி கட்சி தலைவர்களிடம் நெருக்கம் காண்பித்தது திமுகவினரிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.

அதேவேளையில், எதிர்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி நெருக்கம் காட்டியது, தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுகவின் உறவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக இருகட்சியினரும் கூறி வருகின்றனர்.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 778

    0

    0