பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இசைஞானி இளையராஜா எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இது குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து குஜராத் புறப்பட்ட பிரதமர் மோடி, அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக தனது தாயார் உடல் வைக்கப்பட்டிருந்த சகோதரரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், தாயாரின் பூத உடலை தோளில் சுமந்து சென்று, மயானத்தில் அவரது சிதைக்கு தீ மூட்டினார். பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு இசையமைப்பாளரும் எம்.பி.யுமான இளையராஜா இரங்கல் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது :- நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தாயார் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும் வருத்தமும் அடைகிறேன். பிரதமரின் தாயாக இருந்தாலும் தன் மகனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதத தாய்…! எனது தாயாரும் அவ்வாறே! என்னிடம் எதையும் கேட்டதில்லை. நானும் எதுவுமே கொடுத்ததில்லை. இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறேங்கும் காணமுடியுமோ? அவர் மறைந்தது துயரமே! நமது பிரதமர் அவர்கள் துயரத்தில் நான் பங்குகொள்கிறேன். அன்னை ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்!, என தெரிவித்துள்ளார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.