தமிழ் மொழி நிலையானது… தேசிய கல்வி கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும் : ‘வணக்கம்’ சொல்லி உரையை தொடங்கி பிரதமர் மோடி…!!

Author: Babu Lakshmanan
26 May 2022, 10:12 pm

தேசிய கல்வி கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும் என்று சென்னையில் உரையாற்றி பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, உரையை துவங்கும் போது ‘வணக்கம்’ என துவங்கி உரையை துவங்கினார். மேலும், ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப தேன் வந்து பாய்ந்தது காதினிலே.. ‘ என்ற பாரதியின் வரிகளை குறிப்பிட்டு பேசினார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது :- தமிழகம், தமிழ் மொழி, தமிழக மக்கள், தமிழர்களின் கலாச்சாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தமிழ் மொழி நிலையானது. மிகவும் அழகானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. தமிழகத்தில் வருவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும்.

செவித்திறன் குறைவுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 16 பேரில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கேன்ஸ் பட விழாவில் எல்.முருகன் தமிழர்களின் பாரம்பரிய உடையில் பங்கேற்று சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றார்.

தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி வேகமெடுக்கும். தேசிய கல்வி கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.

நட்பு நாடான இலங்கைக்கு அனைத்து வகையிலும் இந்திய அரசு உதவி வருகிறது. இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும். இலங்கையில் யாழ்பானத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான் தான், எனக் கூறினார்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…