டுவிட்டரில் மோதிக் கொள்ளும் அரசியல் கட்சிகள்… #GoBackmodi-யை பின்னுக்கு தள்ளிய #vanakkam_ modi ஹேஷ்டேக்..!!
Author: Babu Lakshmanan26 May 2022, 1:38 pm
பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ள நிலையில், அவரை வரவேற்றும், வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டுவிட்டரில் அரசியல் கட்சியினர் சண்டையிட்டு வருகின்றனர்.
மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடக்கும் பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் மாலை 5.10 மணிக்கு சென்னை வரும் அவரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். வழிநெடுக அவருக்கு பா.ஜ.க.வினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி சுமார் ரூ.31,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். பிரதமர் வருகையையொட்டி, 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் Go back modi என்னும் ஹேஷ்டேக் திராவிட கட்சிகள் மற்றும் எதிர்கட்சியினரால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தமுறை வருகையின் போதும், Go back modi என்னும் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
இதுக்கு போட்டியாக பாஜகவினரும் #vanakkam_ modi என்னும் ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.