பிரதமர் மோடி தமிழகம் வருகை… பாரதிதாசன் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் ; திருச்சியில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு

Author: Babu Lakshmanan
2 January 2024, 8:37 am

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இனி எக்காரணத்தைக் கொண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னணி தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழலில், முதல்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

காலை 10 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வரும் அவர் 10.30 மணிக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பிறகு மதியம் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1200 கோடி செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு இருக்கும் பன்னாட்டு புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, ரூ.19,850 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிலையில், திருச்சி வரும் பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்க இருக்கிறார். இதற்கு பிரதமர் மோடி நேரம் ஒதுக்கியுள்ளதாகவும், இந்த சந்திப்பு திருச்சி விமான நிலையத்தில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், ஓபிஎஸ்ஸின் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 276

    0

    0