இந்தியாவின் பெருமை நீங்கள்: சாம்பியங்களின் சாம்பியன்: வினேஷ் போகத் தகுதி நீக்கம்:பிரதமரின் நெகிழ்ச்சியான ஆறுதல்…!!

Author: Sudha
7 ஆகஸ்ட் 2024, 4:15 மணி
Quick Share

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான வினேஷ் போகத், நிர்ணயித்த அளவை விட 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வினேஷ் பதக்கத்தோடு வருவார் என இந்தியர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் ஒவ்வொரு இந்தியரையும் பெரும் ஏமாற்றம் அடைய செய்துள்ளது. நிர்ணயித்த அளவை விட கூடுதலாக 2 கிலோ எடையுடன் இருந்துள்ளார் வினேஷ் போகட். இதையடுத்து சில நாட்களாக இரவு முழுக்க தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட வினேஷ் போகத் 1.900 கிலோ கிராம் எடையை குறைத்துள்ளார்.ஆயினும் 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகுதி நீக்கம் குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் வினேஷ், நீங்கள் சாம்பியன்களின் சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம்.

இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.அதே சமயம், நீங்கள் தன்னம்பிக்கையோடு உள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு.வலுவாக திரும்பி வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்காக நிற்க காத்து இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 231

    0

    0