தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை? ராமதாஸ் பதிவால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2024, 10:06 am

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டினார். சுமார் 8 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டது சக அரசியல் கட்சியினரை கலங்க வைத்துள்ளது.

முதல் மாநாட்டில் விஜய் பேசியது அரசியல் கட்சி தலைவர்களின் கண்டனத்தை குவித்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, தவெகவை அரசியல் தலைவர் விமர்சித்து வருகின்றனர்.

ஒரு சிலர் ஆதரவு கொடுத்தாலும், பெரும்பாலானோர் விஜய்க்கு எதிராக விமர்சசித்து வருகின்றனர். இதைபற்றி கவலைப்படாமல் இன்னும் அதிகமாக விமர்சனம் வரும் என விஜய் பதிலடி கொடுத்து முக்கியத்துவம் வாய்ந்தது.

இதையும் படியுங்க: நண்பனின் மனைவிக்கு காதல் வலை.. 2வது திருமணம் செய்ய வற்புறுத்தி கொலை மிரட்டல் : கட்சி பிரமுகர் லீலை!

இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என பதிவிட்டுள்ளார்.

பழைய கட்சிகள் போவதும், புதிய கட்சி உருவாகுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் என அவர் பதிவிட்டுள்ளது, விஜய்யை வரவேற்றுள்ளது போல அமைந்துள்ளது.

இனி வரும் காலங்களில் விஜய்யுடன் கூட்டணி போட இப்பவே துண்டு போட ராமதாஸ் துடிக்கின்றாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?