நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி… முழு அதிகாரம் ராமதாஸிடம் ஒப்படைப்பு ; பாமக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்..!!

Author: Babu Lakshmanan
1 February 2024, 2:08 pm

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியில்லை என்று பாமக அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கான அனைத்து பணிகளிலும் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றன.

திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் தற்போது வரை அந்த கூட்டணியிலே தொடர்ந்து வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறிய நிலையில், பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இன்னும் தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.

பாஜக மற்றும் அதிமுக பாமகவை இழுக்க போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாமக குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக திட்டமிட்டுள்ளது. மேலும், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த அதிகாரம் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராமதாஸ் கூறுகையில், “பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பப்படி தனித்து போட்டியிட நாம் இப்போது தயாராக இல்லை. கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். மாநில நலன், தேசிய நலன் மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளோம். குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்,” எனக் கூறினார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 361

    0

    0