சென்னை : கூடுதல் தரவுகளை இணைத்து தமிழக அரசு சட்டமன்றத்தில் மீண்டும் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் கல்லூரியில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது பேசிய அவர்,காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் பல்வேறு ஆபத்துக்களை உருவாகி வருவதாகவும், அதனுடைய பாதிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் பெரும் தீங்காக அமையும். எனவே மாணவர்கள் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பெற வேண்டியது அவசியம், என வலியுறுத்தி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது :- வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நேற்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது. இருந்தபோதிலும் உயர்நீதிமன்றம் எழுப்பி இருந்த 7 கேள்விகளில் ஆறு கேள்விகள் தவறானவை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசிடம் உள்ள தரவுகளை முறையாக சமர்ப்பித்தால் எதிர்காலத்தில் நிச்சயம் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. எனவே தமிழக அரசு ஏற்கனவே இருக்கும் தரவுகளுடன் கூடுதல் தரவுகளை இணைத்து 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டப்பேரவையில் மீண்டும் சட்டமியற்ற வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதங்கள் திருப்திகரமாக இருந்தது.
மற்றவர்கள் சொல்வது போல அதிமுக அரசு கொண்டுவந்த உள் ஒதுக்கீடு சட்டம் அவசரகதியில் கொண்டுவரப் பட்டது அல்ல நீண்டகால கோரிக்கைக்கு பின்பு முறையான கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு அனுப்பி வைத்த நீட் மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் இருப்பது முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார் என்பதையே காட்டுகிறது.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் டோல்கேட் இருக்கக்கூடாது என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே திமுக பெண் கவுன்சிலர்களின் குடும்பத்தினர் நிர்வாகத்தில் தலையிடுவதை திமுக தலைவர் ஸ்டாலின் தடுக்க வேண்டும்.
சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் பொதுப் போக்குவரத்து முழுவதுமாக அனைவருக்கும் இலவசம் என அறிவிக்க வேண்டும். அதற்கு ஏற்ப தரமான 8000 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.