நெப்போலியன் போயிட்டான் ‘வீரன்’ வந்துட்டான்…. பிரச்சாரத்தின் போது தமிழக அரசை பாட்டு பாடி கிண்டல் செய்த ராமதாஸ்…!!!

Author: Babu Lakshmanan
6 April 2024, 4:02 pm

ஆவதும் பெண்ணாலே… ஆனதெல்லாம் பெண்ணாலே.. அழிவது என்பதை மட்டும் நான் சொல்ல மாட்டேன் என்றும், புதிதாக வந்துள்ள வீரன் சொல்லுவான் என்று மேடையில் பாட்டு பாடி பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணியை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இந்த தருமபுரி மாவட்டத்தில் நான் பிறக்கவில்லையே என அடிக்கடி கூறி வேதனை பட்டு இருக்கிறேன்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

சௌமியா அன்புமணியின் வெற்றியைக் காண மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த நான் காத்திருக்கிறேன். அந்த வெற்றியின் போது நீங்கள் அனைவரும் ஆனந்த கூத்தாட வேண்டும். குடி தண்ணீரை கூட கொடுக்காத அரசாக இந்த நாடு செயல்பட்டு கொண்டிருந்தது. இதனை நினைத்து கோபம் அடைந்து நான் எல்லோரையும் திரட்டி மிகப்பெரிய மனித சங்கிலி போராட்டத்தை நடத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினேன்.

அப்போது கலைஞர் கொஞ்சம் பொறுங்கள் பொறுங்கள் என கூறினார். அதையும் தாண்டி மிகப்பெரிய போராட்டங்களை கையில் எடுத்ததன் விளைவாக இன்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போது நீங்கள் குடிக்கும் நீர் கூட என்னுடைய போராட்டத்தின் விளைவாக வந்தது.

திமுக, அதிமுகவினர் மாறி மாறி ஆட்சி புரிந்து வருகின்றனர். ஆனால் குடிநீர் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை கேட்டால் வருது…வருது … எனக் கூறுகிறார்களே தவிர, தண்ணீர் வந்த பாடு இல்லை. ஜப்பானில் இருந்து வருகின்றது, கடன் கேட்டிருக்கிறோம் என்று கூறுகின்றார்களே.

மேலும் படிக்க: ரோடு ஷோ நடத்தக்கூடாது : பாஜக தலைவர் நட்டா பேரணிக்கு திருச்சி காவல்துறை அனுமதி மறுப்பு!!

இங்க சாராயம் விற்று வந்த பணத்தை என்ன செய்தார்கள்?. தர்மபுரி வழியாக செல்லும் காவிரி நீரை இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொண்டு சென்றீர்களே, தர்மபுரி மாவட்டத்திற்கு ஏன் கொண்டு வரவில்லை என கேட்டு போராடினவன் இந்த ராமதாஸ். பெண்கள் மனது வைத்தால் எல்லாமே நடக்கும்.

ஆவதும் பெண்ணாலே.. ஆனதும் பெண்ணாலே.. ஆவதெல்லாம் பெண்ணாலே.. அழிவது என்பதை மட்டும் நான் கூறமாட்டேன். ஏன்னா அதை சொல்வதற்கு தான் வீரன் வந்திருக்கிறான். நெப்போலியன் போயிட்டான் வீரன் வந்துட்டான் என பாட்டு பாடினார்.

நம் பகுதியில் வேலைவாய்ப்பு கிடைக்க, பூரண மதுவிலக்கு வர, குடிநீர் பிரச்சினை தீர, மாம்பழ சின்னத்திற்கு வாக்களியுங்க என கூறி சௌமியா அன்புமணிக்கு வாக்குகளை சேகரித்தார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 336

    0

    0