2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை;15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை; விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Author: Sudha16 July 2024, 4:17 pm
இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென் நெற்குணம் கிராமத்தில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு வயது மற்றும் ஒன்பது வயது சிறுமிகளை கடந்த 2017 மற்றும் 2019 ஆண்டு காலகட்டத்தில் அதே பகுதியில் வசித்து வரும் உறவினர்களான தீனதயாளன், அஜித்குமார், பிரபா, பிரசாந்த், ரவிக்குமார், அருண், மகேஷ், ரமேஷ், துரைராஜ், மோகன், செல்வம், கமலக்கண்ணன், முருகன், துரைசாமி, செல்வ, சேகர் ஆகிய 15 நபர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளனர்.
இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் பள்ளியில் சோர்வாக காணப்பட்ட பொழுது பள்ளி ஆசிரியர் இந்த சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது உறவு முறை கொண்ட 15 நபர்கள் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது
இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு பிரம்மதேசம் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் இன்று போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்த 15 நபர்களுக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை, மற்றும் 32,000 அபராதம் வழங்கி பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார்.இரண்டு சிறுமிகளில் ஒன்பது வயது உடைய சிறுமி கடந்த 2019 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 15 நபர்களும் அப்பா தாத்தா சித்தப்பா அண்ணன் ஆகிய நெருங்கிய உறவுமுறை கொண்டவர்கள் ஆகும்