சுதந்திர தினத்தில் பாயப் போகும் குண்டர் சட்டம்: இதைத் தடுக்க வேண்டாம்: உயர்நீதிமன்றம் அதிரடி….!!

Author: Sudha
12 August 2024, 12:15 pm

சுதந்திர தினத்தையொட்டி, குடியிருப்போர் நலச்சங்கத்தில் கொடியேற்றுவதற்கு, முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பாதுகாப்பு வழங்குவது நமக்கு அவமானம்.கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாதிக்கப்பட்டோர் வழக்கு தொடரலாம்.

தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைக்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ