நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் மதுரை, தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த், தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கு திரையுலகிலும் பிரபல நடிகராக இருக்கிறார். சமூக அரசியல் தொடர்பான கருத்துகளையும் வலைத்தளத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று சொன்னதால் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக சாடி உள்ளார்.
இதுகுறித்து வலைத்தளத்தில் சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். வயதான எனது பெற்றோர் கொண்டு வந்த பைகளில் இருந்த நாணயங்களை எடுக்கும்படி சொன்னார்கள்.
தொடர்ந்து இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே பேசினார்கள். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி கடுமையாக நடந்து கொண்டனர். வேலையற்றவர்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
சித்தார்த் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானது. இவருக்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது இணையப் பக்கத்தில், “மதுரை விமானநிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், மொழி பிரச்சனையை தூண்டும் வகையில் சித்தார்த்தின் சமூக வளைதளப் பதிவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.