சாதிய மோதலை தூண்டிவிட முயற்சி… ரவுடி கொலையால் இயக்குநர் பா. ரஞ்சித்திற்கு வந்த சிக்கல்!!

Author: Babu Lakshmanan
24 May 2024, 7:50 pm

சாதிய மோதலை தூண்டிவிட முயற்சித்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது பரமக்குடி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை – மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியை சோ்ந்த தீபக்ராஜா (30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதால், ரவுடி பட்டியலில் சேர்த்து தொடர்ந்து அவரை போலீசார் கண்காணித்து வந்தனர்.

மேலும் படிக்க: கேரள அரசு முன்மொழிந்த கருத்துக்களை பரிசீலிக்கக் கூடாது ; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

கடந்த 20ந் தேதி தனது வருங்கால மனைவி மற்றும் அவரது தோழிகளுடன் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்தபோது அங்கு பதுங்கி இருந்த 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் தீபக் ராஜாவை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்டு பா. ரஞ்சித் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பரமக்குடி டிஎஸ்பியிடம் தென் தமிழக கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டிவிட முயற்சிப்பதாக இயக்குநர் பா. ரஞ்சித் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!