முதலமைச்சர் பெயரை சொல்லி ரூ.10க்கு பரோட்டா கேட்டு மிரட்டல் ; பிரபல நரிக்குறவர் பெண் அஸ்வினி மீது போலீசில் புகார்
Author: Babu Lakshmanan19 September 2022, 6:54 pm
சென்னை : சமூக வலைதளங்களில் வைரலான பிரபல நரிக்குறவர் பெண் அஸ்வினி மீது வியாபாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் தமிழக அரசு சார்பில் போடப்பட்ட அன்னாதனத்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி புறக்கணிக்கப்பட்டார். இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு, மீண்டும் பந்தியில் அமர்ந்து சாப்பிட வைக்கப்பட்டார்.
இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பெண்ணை அழைத்து பேசினார். அஸ்வினியின் வீட்டிற்கும் முதலமைச்சர் சென்றிருந்தார். நரிக்குறவ மக்களுக்கு உதவிகளையும் தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டது. இதன் காரணமாக அஸ்வினி மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.
ஆனால், திமுக அரசு வழங்கிய நலத்திட்டங்கள் எதுவும் தங்களை வந்து சேரவில்லை என்று அஸ்வினி பேசிய புகார் விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது திமுக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இதனிடையே, நரிக்குறவர் சமூகத்தை எஸ்டி பட்டியலில் மத்திய அரசு சேர்த்து நடவடிக்கை எடுத்த நிலையில், அதற்கு நன்றி தெரிவித்து பாஜகவுக்கு அஸ்வினி நன்றியும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள உணவு கடையில் 10 ரூபாய்க்கு சப்பாத்தி, புரோட்டா கேட்டு மிரட்டுவதாகவும், தர மறுத்தால் கத்தியை காட்டி அச்சுறுத்துவதாக அந்த பகுதியை சேர்ந்த வணிகர்கள் நரிக்குறவ பெண் அஸ்வினி மீது காவல் நிலையத்துல் புகார் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக உணவு கடை உரிமையாளர் சுலோச்சணா, எங்கள் உணவகத்தில் அடிக்கடி உணவு சாப்பிடும் அஸ்வினி, திடீரென நேற்று ரூ.10க்கு உணவு கொடுக்கும்படி பிரச்சனை செய்ததாகவும், தரமறுத்ததால் எனது கணவர் கழுத்தில் கத்தியை வைத்தாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே அஸ்வினி மீது நடவடிக்கை எடுக்கும் படி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.
0
0