பிடிக்கச் சென்ற போது தாக்குதல்… துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார்… 2 ரவுடிகள் மீது குண்டு பாய்ந்தது… ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
5 January 2024, 11:25 am

ஈரோடு – பெருந்துறை அருகே அரிவாளால் தாக்க வந்த ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவசுப்ரமணி மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. களக்காடு கொலை சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியான இவர், தனது கூட்டாளிகள் 4 பேருடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பெருந்துறையை அடுத்த குள்ளம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் நெல்லை தனிப்பிரிவு எஸ்.ஐ. ஆண்டோ தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், அங்கு பதுங்கியிருந்த ரவுடிகள் போலீசார் மீது அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தினர்.

உடனே தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், சிவசுப்ரமணியின் 2 கூட்டாளிகள் குண்டு அடிபட்டது. அவர்களை போலீசார் சுட்டு பிடித்தனர். ரவுடி சிவசுப்ரமணி மற்றும் அவரது 2 கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பினார். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தாக்க வந்த ரவுடிகளை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 500

    0

    0