மேட்டூர்: வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் கருங்கலூரில் பாமகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும், சாதி பிரிவினை மற்றும் வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதனடிப்படையில், எம்எல்ஏ சதாசிவம் மீது கொளத்தூர் காவல் துறையினர் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேட்டூர் பா.ம.க எம்எல்ஏ மீது விசிக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து இருப்பதால் கொளத்தூரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, எம்எல்ஏ சதாசிவம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ஆஞ்சியோ சிகிச்சை பெற்ற ரகுமான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,தற்போது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை…
இந்தி திணிப்பை எதிர்க்கிறேன் தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகரும்,ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில்…
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…
This website uses cookies.