அயோத்தியில் நடந்தது அரசியல் சூதாட்ட வெற்றி விழா : பார்ப்பனிய வைணவமயமாக்கும் சூழ்ச்சி.. திருமா ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2024, 8:28 pm

அயோத்தியில் நடந்தது அரசியல் சூதாட்ட வெற்றி விழா : பார்ப்பனிய வைணவமயமாக்கும் சூழ்ச்சி.. திருமா ஆவேசம்!

விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது, “அயோத்தியில் வரலாற்றுத் திரிபு வாதம், பெரும்பான்மை ஆதிக்க வாதத்தால் வென்றுள்ளது. இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், இராமரின் பெயரால் வெற்றிவாகை சூடியுள்ளது.

இராமர் என்கிற சத்திரிய அடையாளத்தை ஆயுதமாக ஏந்தி, மோடி என்கிற வைஸ்யரைக் கொண்டு அப்பாவி சூத்திர இந்துக்களை ஏய்த்து அவர்களை வீழ்த்திய பிராமண சனாதனிகளின் அரசியல் சூதாட்ட வெற்றி விழாதான் அயோத்தியில் நடந்தேறியுள்ளது.

இந்துத்துவா என்னும் பெயரில் சைவம் உள்ளிட்ட பிற இந்து அடையாளங்கள் யாவற்றையும் பார்ப்பனிய வைணவமயமாக்கும் சூழ்ச்சி அரங்கேறியுள்ளது. இது இசுலாமியர், கிறித்தவர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த தேசத்திற்கும், அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கும் எதிரானது.” என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 294

    0

    0