ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள் : முக்கிய கட்சிகள் PRESENT.. காணாமல் போன இரு தலைகள்!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2024, 9:51 pm

ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள் : முக்கிய கட்சிகள் PRESENT.. காணாமல் போன இரு தலைகள்!

குடியரசுத் தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சிறப்பு தேநீர் விருந்து அளித்தார். இதில், பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என நூற்றுக்கணக்கானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, தேசப்பிதா மகாத்மா காந்தியை அவமதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதால், தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்தது. அதேபோல், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேநீர் விருந்தை புறக்கணித்தன.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணித்துவிட்டு திருச்சி அருகே சிறுகனூரில் நடைபெறும் விசிக மாநாட்டிற்குச் சென்றார். விசிக சார்பில் நடைபெற்று வரும் ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின்.

அதே சமயம், திமுக சார்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ரகுபதி, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் பங்கேற்றனர். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோரும் ஆளுநரின் விருந்தில் பங்கேற்றனர்.

அதிமுக சார்பில் ஜெயக்குமார் மற்றும் பாலகங்கா ஆகியோரும், பாஜக சார்பில் எல்.முருகன், வானதி சீனிவாசன், கரு.நாகராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பாஜகவைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் இந்த விருந்தில் பங்கேற்றனர். பாமக சார்பில் ஜிகே மணி இந்த விருந்தில் பங்கேற்றார். ஆனால், தேமுதிக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

பாஜக, வரும் லோக்சபா தேர்தலில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், இன்றைய ஆளுநர் விருந்தில், தேமுதிக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்கவில்லை.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 440

    0

    0