ஆகஸ்ட் 20ஐ குறிவைக்கும் அரசியல் கட்சிகள்… அட இதுல இத்தனை விஷயம் இருக்கும் : அதிரும் தமிழகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2023, 9:53 pm

ஆகஸ்ட் 20ஐ குறிவைக்கும் அரசியல் கட்சிகள்… அட இதுல இத்தனை விஷயம் இருக்கும் : அதிரும் தமிழகம்!!

தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநாடு, திமுக உண்ணாவிரதப்போராட்டம், ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அண்ணாமலை நடை பயணம் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக – அதிமுக- பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை அகற்றப்பட்டு ஒற்றை தலைமையானது கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் படி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் தனது அதிகாரத்தையும் தனது செல்வாக்கையும் தொண்டர்களுக்கு மட்டுமில்லாமல் எதிர்கட்சிகளுக்கு காட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அதிமுக மாநில மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

சுமார் 4 மாத காலத்திற்கு முன்பே ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளை அதிமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். சுமார் 10 லட்சம் பேரை ஒரே இடத்தில் திரட்டும் வகையில் பிரம்மாண்டமாக பணியானது நடைபெறுகிறது.

இந்தநிலையில் எடப்பாடி அணிக்கு டப் கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர் செல்வமும் அதே ஆகஸ்ட் 20 ஆம் தேதியை குறிவைத்து களத்தில் இறங்கியுள்ளார்.

முன்னதாக கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக கோவையில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்த திட்டமிருந்தார். ஆனால் அந்த தேதியில் சென்னையில் தங்கள் அணியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாலை 6 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாகவும் அப்போது முக்கிய முடிவு வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதே தேதியில் திமுகவும் போட்டியில் இறங்கியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் மீண்டும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ள நிலையில், திமுக தேர்தல் வாக்குறுதியான நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது. நீட் தேர்வு தோல்வி காரணமாக மகன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுகவினர் சார்பாக உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20 ஆம் தேதியை குறிவைத்து ஒருவருக்கு ஒருவர் போட்டியாக முக்கிய அரசியல் கட்சிகள் களம் இறங்குவது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • surya 45 movie villan role act in rj balaji ரசிகர்களுக்கு பயங்கர ட்விஸ்ட் கொடுத்த ஆர் ஜே பாலாஜி…சூர்யா45-ல் வில்லனாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்..!
  • Views: - 261

    0

    0