பெரியாரை தொடாமல் தமிழ்நாட்டுல அரசியலா.. விஜய்க்கு மெசேஜ் சொன்ன உதயநிதி.. அந்த வார்த்தையை கவனித்தீர்களா?

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2024, 2:43 pm

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். துணை முதல்வர் பதவி குறித்து முக்கிய ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், துணை முதல்வர் பதவி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, என்னை துணை முதல்வராக்க வேண்டும் என தொண்டர்கள் சொல்வது அவர்களின் விருப்பம், துணை முதலமைச்சர் பதவி குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார் என கூறினார்.

மேலும் படிக்க: மூட்டை தூக்கும் தொழிலாளியிடம் ₹3.82 லட்சம் மோசடி.. பழைய நாணயங்களை வைத்து பலே மோசடி நடத்திய கும்பல்!

மேலம் விஜய் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, பெரியாரை தொடாமல் தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்ய முடியாது. விஜய் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது மகிழ்ச்சி, என் நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள் என கூறினார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 295

    0

    0