புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை கவிழ்க்க பாஜக சதி செய்கின்றது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த நான்கு மாதத்திற்கு பிறகு புதுச்சேரியில் இன்று பெட்ரோல் விலை 100ஐ தாண்டி விற்பனையாகின்றது.இந்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலையுர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து எல்லையம்மன் கோயில் வீதியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இரண்டு சக்கர வாகனத்தை மாலை அணிவித்து சவப்பாடையில் ஏற்றி வைத்தும், சாலையில் விறகு மூட்டி அடுப்பு அமைத்தும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி இன்று புதுச்சேரியில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. தினமும் பெட்ரோல் விலையை மோடி அரசு ஏற்றி வருகிறது.நாட்டு மக்களை வஞ்சிக்கின்ற மத்திய அரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த 7 வருடங்களில் 26 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை மத்திய அரசு ஈட்டியிருக்கின்றது.முதலமைச்சர் ரங்கசாமியை எப்போது கவிழ்பது என்பது குறித்தான சதி வேலையில் தான் புதுச்சேரி பா.ஜ.க. ஈடுப்பட்டு வருகிறது, எனவும் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.