மக்கள் பிரதிநிதியாக இருக்க ஆசை… விரைவில் அந்த ஆண்டவனும், ஆள்பவனும் முடிவு செய்வார்கள் : ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!!

Author: Babu Lakshmanan
22 February 2024, 9:13 am

என்னை வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்றும், நான் மக்கள் பிரதிநிதியாக இருக்க விரும்புகிறேன் அதை ஆண்டவனும், ஆள்பவனும் முடிவு செய்வார்கள் என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தர்ராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஆளுநர் மாளிகையில் பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்களுடன் கொண்டாடினார். இதில் கடந்த 3 ஆண்டுகளில் அவர் செய்த பணிகள் குறித்த புத்தகத்தை ஆளுநர் வெளியிட அதனை தலைமை செயலாளர் சரத் சவுகான் பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், 3 ஆண்டுகள் எப்படி ஓடியது என்பது ஆச்சரியமாக உள்ளது. உங்களோடு இணைந்து மகிழ்ச்சியாக பணியாற்றிகொண்டு இருக்கிறேன். எனது பயணம் கடுமையான பயணம் தான். நான் எனது தந்தையுடன் பயணிக்காமல் எதிர் இயக்கத்தில் சேர்ந்து எண்ணை உயர்த்தி கொண்டேன்.

மேலும், ஆளுநர் பதவியில் அதிகமான முதல்வர்களை பார்த்ததில் பெருமை கொள்கிறேன். 4 முதல்வர்களை எனது பதவியின் போது பார்த்து பயணித்துள்ளேன். செப்டம்பர் 17ம் தேதி வந்தால் 25 ஆண்டுகள் நான் பொதுவாழ்க்கை, அரசியலில் இருந்துள்ளேன். மக்கள் பணியாற்றிகொண்டு இருக்கிறேன். மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது ஆண்டவனும், ஆள்பவனும் தான் முடிவு செய்வார்கள்.

என்னை வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்த வேண்டாம். மருத்துவ வசதி மற்றும் மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. புதுச்சேரிக்கு பணியாற்ற வேண்டும். எவ்வளவோ பேப்பர் பார்த்துட்டேன். நினைத்திருந்தால் மருத்துவராகவே பணியாற்றி இருப்பேன். சட்டப்பேரவை கட்டுவதில் குறிப்பிட்ட செலவினங்களில் சந்தேகம் இருந்தது. இவ்வளவு செலவினங்கள் தேவையா என விவாதத்தில் இருந்தது, அவ்வளவுதான். கோட்டும் ஒயிட்டு, நாட்டில் ஒயிட்டு. பணத்தை பற்றி பேசாதீர்கள், எனக் கூறினார்.

தூத்துக்குடி மழை வெள்ளத்தை பார்வையிட்ட நீங்கள் ஏன் சென்னை மழை வெள்ளத்தை பார்க்கவில்லை என செய்தியாளர்கள் கேள்விக்கு, அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், என பதிலளித்தார்.

  • sachein movie re release box office collection report சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?