சென்னை : ஆளுநர், தமிழக அரசு விவகாரத்தில் இருபுறமும் வரம்பு மீறாமல் பேச வேண்டும் என்றும், கருத்து மோதல்கள் இல்லாமல் கருத்து பரிமாற்றமாக பேச வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
பாரம்பரிய முறைப்படி தனது இல்லத்தில் மண்பானையில் பொங்கல் வைத்து, சுற்றி இருந்தோர் “பொங்கலோ பொங்கல்” என்று உற்சாக முழக்கங்களை எழுப்ப பொங்கல் பண்டிகையை வரவேற்றார்.
மேலும் இந்தியா G20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளதை உணர்த்தும் விதமாக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இல்லத்தின் நுழைவாயிலில் “ஜி20 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்று கோலமிடப்பட்டிருந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியதாவது:-
பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட ஆளுநர் இந்த பொங்கல் ஒற்றுமையாக தமிழரின் பெருமையை உயர்த்துவதாக இந்தியாவின் பெருமையை உயர்த்துவதாக இருக்க வேண்டும். கொரோனாவுக்கு பிறகு அனைவரும் இணைந்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கிறோம். இவ்வாறு பொங்கல் கொண்டாடுவதற்கு இறைவன் ஆசியும், தடுப்பூசியும் தான் காரணம் .
சீனா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவில் இருந்து வெளிவராத நிலையில், இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது. அதற்குக் காரணம் பிரதமர், முன்களப் பணியாளர்கள் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வோம். கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது இணையதளங்களில் மிகக் கீழ்த்தரமாக விமர்சிப்பது உள்ளிட்டவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
ஒரு சிலர் ஆளுநரைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். முதலமைச்சர் யாரையும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லிய போதும், ஒரு சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும். கருத்து வேற்றுமைகள் இருக்கலாம், ஆனால் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்க வேண்டும் என்பது தான் மரபு.
கருத்து மோதல்கள் இருக்கலாம். கருத்து வேற்றுமை இருக்கலாம். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாடு என்கிற பெயருக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு. இதை அறிவித்த காமராஜருக்கு பெருமை உண்டு. அதை சட்டமாக்கிய அண்ணாதுரைக்கும் பெருமை உண்டு. அதைத் தமிழர்களாக காப்பாற்ற வேண்டியது நம் கையில் தான் உள்ளது.
கருத்தாற்றல்கள் மோதல்களாக வெடிக்காமல், மோசமான விமர்சனமாக இல்லாமல் ஆக்கபூர்வமான விமர்சனமாக இருக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் வார்த்தை பிரயோகம் என்பது மோசமாக உள்ளது. நானே ஒரு கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தால் என்னயும் விமர்சனம் செய்வார்கள்.
ஒரு கருத்தை சொன்னால் அந்த கருத்தை நாகரிகமாக எதிர்க்கொள்ள வேண்டும். பொங்கல் எப்படி இனிமையாக உள்ளதோ, அதுபோலவே இணையதளங்களில் வார்த்தைகள் இனிமையாக இருக்க வேண்டும். இருபுறமும் வரம்பு மீறாமல் பேச வேண்டும். கருத்து மோதல்கள் இல்லாமல் கருத்து பரிமாற்றமாக பேச வேண்டும்.
ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளது. இன்றிலிருந்து புதுவையில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் , இங்கே (தமிழகத்தில்) கொடுக்கிறார்களா..? இல்லையா..? என்பதை கேள்விக்குறியோடு நிறுத்திக் கொள்கிறேன்.
இந்தப் பொங்கல் தமிழக, தமிழ்நாடு பொங்கல். தமிழ்நாட்டில் தமிழக பொங்கல் ; தமிழ்நாட்டில் தமிழ் பொங்கல், என்று தெரிவித்தார்.
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…
This website uses cookies.