தமிழக மக்களுக்கு பொங்கல் சர்ப்ரைஸ்… இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்க தமிழக அரசு திட்டம்?

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2023, 10:50 am
Tn
Quick Share

தமிழக மக்களுக்கு பொங்கல் சர்ப்ரைஸ்… இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்க தமிழக அரசு திட்டம்?

விரைவில் பொங்கல் பண்டிகை வரப்போகிறது.. இந்த பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து, திமுக அமைச்சர் பெரிய கருப்பன், மகிழ்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கூட்டுறவு துறை செயல்பாடு தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, கூட்டுறவு வங்கிகளில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள் போன்ற நலிவடைந்த பிரிவினருக்கு எளிய முறையில் கடன் வழங்கப்படுகிறது..

இதனால் கந்து வட்டிக்காரர்களிடம், அதிக வட்டிக்கு கடன் வாங்குவது தடுக்கப்படுகிறது. தேசிய தனியார் வங்கிகளில் வழங்கப்படும் அனைத்து நவீன வங்கி சேவைகளும் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படுகின்றன.

கூட்டுறவு வங்கிகளில் கல்வி கடன் வழங்க முயற்சி எடுக்கப்படும்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்… பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று பெரியகருப்பன் கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பானது, தமிழக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

காரணம், மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் ஏற்கனவே பல்வேறு அதிருப்தி நிலவி கொண்டிருக்கின்றன.. எதிர்க்கட்சிகள் இந்த 1000 ரூபாய் உரிமைத்தொகை விஷயத்தை வைத்து, அரசியல் செய்தும் வருகின்றன.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், இதையே மையமாக வைத்து தேர்தலின்போது பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டிருக்கின்றன.. எனவே, கார்டுதாரர்களுக்கு வரும் 1000 ரூபாயுடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு வெளியிடலாமா? என்று தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், திமுக அமைச்சரும், பொங்கல் பரிசு தொகுப்பு தெரிவித்துள்ளது, இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 238

    0

    0