46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட ரத்னா பந்தர்; பூரி ஜெகந்நாதர் கோவில் ரகசியம்; இத்தனை தங்கமா?,..

Author: Sudha
15 ஜூலை 2024, 9:52 காலை
Quick Share

ஒடிசா மாநிலம் பூரியில் உலகப்புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பல்வேறு கால கட்டங்களில் அங்கு ஆட்சி செய்த மன்னர்கள் விலை மதிப்பு மிக்க ஆபரணங்களை இந்த கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினர்.

இந்த நகைகள் அனைத்தும் ஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ அறைக்குள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதில் உள்ளே உள்ள அறை குறித்து மர்மம் நிலவி வருகிறது. இந்த அறை கடைசியாக 1978- ல் திறக்கப்பட்டது. அப்போது அதை அருகில் இருந்து பார்த்தவர் நகைகள் அனைத்தும் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கப்பட்டு இந்ததாக கூறினர்.

பொக்கிஷ அறை குறித்து ஆராய 1984 ல் தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு செய்ய சென்றனர். ஆனால், பொக்கிஷ அறையின் நிலமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் பாம்புகள் உள்ளே இருப்பதாகவும் கூறி திரும்பி வந்து விட்டனர்.

இந்நிலையில் 46 ஆண்டுகளுக்கு பிறகு பொக்கிஷ அறை திறக்கப்பட்டுள்ளது. பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி தொடங்கி உள்ளது.. தொல்லியல் துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் முன்னிலையில் ரத்னா பந்தர் என்னும் பொக்கிஷ அறை திறக்கப்பட்டுள்ளது. பொக்கிஷ அறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகள் முழுவதும் வீடியோ ரெக்கார்டு செய்யப்படும். மிகவும் ரகசியமாகவே இது வைத்திருக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் 1.28 மணிக்கு நல்ல நேரம் பார்த்து பொக்கிஷ அறை திறக்கப்பட்டது. மதிப்பீட்டு பணிகள் முடிய சுமார் 70 நாட்கள் வரை ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 252

    0

    0