யாசகமா உங்க கிட்ட கேட்கிறோம்.. பம்மாத்து வேலை எல்லாம் வேண்டாம் : நிர்மலா சீதாராமனுக்கு பூவுலகின் நண்பர்கள் பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2023, 1:43 pm

யாசகமா உங்க கிட்ட கேட்கிறோம்.. பம்மாத்து வேலை எல்லாம் வேண்டாம் : நிர்மலா சீதாராமனுக்கு பூவுலகின் நண்பர்கள் பதிலடி!

நேற்றைய தினம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் பெய்த பெருமழையை பேரிடராக அறிவிக்க முடியாது. சுனாமியை கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை, மேலும் வானிலை ஆய்வு மையம் சரியான முன்னெச்சரிக்கையை கூறியிருந்தது என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சியினரும் , கூட்டணி கட்சியினரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தலைவர் சுந்தர்ராஜன் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

“சுனாமியைக் கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை”- நிர்மலா சீத்தாராமன்

இந்தியாவின் பேரிடர் மேலாண்மை சட்டம், சுனாமி வந்து ஒரு வருடம் கழித்துதான் இயற்றப்பட்து, அப்போதுதான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படது, பேரிடர் மேலாண்மை என்கிற வார்த்தையை கற்றுக் கொடுத்ததே சுனாமிதான். அதனால் சுனாமியை கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்கிற பம்மாத்து எல்லாம் வேண்டாம்.

தமிழ்நாடு கேட்பது இதுதான், “வழக்கமாக sdrf க்கு கொடுக்கவேண்டிய நிதி இல்லாமல், நாங்கள் பேரிடருக்கும் கேட்கும் தொகையை அல்லது அதில் ஒரு பாதியாவது கொடுங்கள்” என்பதுதான்.

இதை ஒன்றும் யாசகமாக கேட்கவில்லை, இந்திய ஒன்றியத்திற்கு மிக அதிகமாக வரியை கொடுக்கும் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது என்கிற உரிமையில்தான் கேட்கிறோம் என பதிலடி கொடுத்துள்ளார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 348

    0

    0