சவுக்கு சங்கரால் சிக்கிய பிரபல யூடியூப் சேனல்.. வழக்குப்பதிவு செய்த கோவை சைபர் க்ரைம்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2024, 9:21 am

சவுக்கு சங்கரால் சிக்கிய பிரபல யூடியூப் சேனல்.. வழக்குப்பதிவு செய்த கோவை சைபர் க்ரைம்..!!!

பிரபல யூடியூப்பரான சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனியில் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்தனர். அவரை கோவை அழைத்து வந்து 1-வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அவரை வருகிற 17-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கோவை சிறைக்கு கொண்டு செல்லும்போது சவுக்கு சங்கர் கோஷமிட்டபடியே போலீஸ் வேனில் சென்றார். பின்னர் நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கரின் ஆட்சேபகரமான கருத்துக்கள் அடங்கிய பேட்டி தொடர்பான வீடியோவை வெளியிட்ட யூடியூப் சேனல் ரெட் பிக்ஸ் மீதும் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2-வது குற்றவாளியாக சேனலை சேர்த்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ