அரையாண்டு தேர்வு புதிய அட்டவணை.. 6 முதல் 12ம் வகுப்பு வரை எப்போது தேர்வு? முழு விபரம்!
மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக நாளை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதால் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளிகளை தூய்மைப்படுத்த 1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 6 முதல் 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 13-ம் தேதி தொடங்கி டிசம்பர் 22-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. அதன்படி 1 முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் நண்பகல் 12. 30 வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. 6 முதல் 8 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு காலை 10 மணி முதல் நண்பர்கள் 12. 30 மணி வரை நடைபெறுகிறது.
9 முதல் 10 மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு காலை 9 மணி முதல் நண்பகல் 12. 45 வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு பகல் 1.15 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
This website uses cookies.