தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு… தேதி மாற்றம் : முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan10 December 2023, 4:08 pm
தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு… தேதி மாற்றம் : முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை தொடங்கவிருந்த அரையாண்டு பொதுத் தேர்வு வரும் புதன்கிழமை தொடங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரையாண்டு பொதுத்தேர்வுக்கான புதிய கால அட்டவணை கல்வித்துறை வெளியிடும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் சீருடை ஆகியவற்றை நாளை மறுநாள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டு தேர்வு இரண்டு நாள்கள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், சென்னை, காஞ்சிபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட நான்கு மாவட்டங்களில் பள்ளிகளை தூய்மைப்படுத்த 1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதால் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு தலா 50 லட்சமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
0
0