மாண்டஸ் புயலால் அதிரடி மாற்றம்… பல்கலைத் தேர்வுகள் ஒத்திவைப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை… தமிழக அரசு போட்ட உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2022, 8:26 pm

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும்.

நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தற்போது 520 கி.மீ தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது.

மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் மாலையில் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் ,பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழங்கள் அறிவித்துள்ளன.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்