கரூரில் அமைச்சரின் நிகழ்ச்சிகாக சுமார் 5 மணி நேரம் காத்திருந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
கரூர் நகர ஆரம்ப சுகாதார நிலையமான கஸ்தூரிபாய் தாய் சேய் நல மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி தொடங்கி வைக்கும் திட்டம் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில், அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்.
இந்த திட்டம், நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் நடைபெற இருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பிலும், ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சி துறை சார்பில் அறிவிக்கப்பட்டும், ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. நேற்று மதியம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திடீரென ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது என்றும், இது குறித்த தகவல் மீண்டும் அறிவிக்கப்படும் என்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அறிவித்திருந்தது.
பின்னர், அதே செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நாளை (நேற்று) தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்று நேற்று முன்தினம் இரவு 8.49 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
முதலில் கர்ப்பிணி பெண்கள் திட்டத்தினை முடித்து கொண்டு பின்னர் மற்ற நிகழ்ச்சிகளை வைத்து கொள்ளலாம் என்று நினைத்த மாவட்ட நிர்வாகம், நேற்று காலை 9 மணிக்கு முதல்நிகழ்ச்சியாக கரூர் கஸ்தூரி பாய் தாய் சேய் நல மையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குதல் திட்டத்தினை அறிவித்தது.
இதற்காக பயனாளிகளை முன் கூட்டியே சுமார் 8 மணிக்கே மருத்துவமனை வளாகத்திற்கு வரச்சொன்னதால், கர்ப்பிணி பெண்கள் ஒரு சிலர் உணவு உண்ணாமல் வந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், காலை 8.45 மணியளவில் திடீரென்று நிர்வாக காரணமாக காலை 9 மணிக்கு பதில் 10.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்க உள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத்துறையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்துறை அறிவித்தது. பின்னர் 10.30 மணிக்கு வர வேண்டிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மதியம் 12.30 மணிக்கு வந்திருந்தார்.
காலையில் நடக்க வேண்டிய நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் முன்னதாக, அதாவது 8 மணியிலிருந்தே காத்து கொண்டிருந்த கர்ப்பிணி தாய்மார்கள், சுமார் 4.30 மணி நேரமாக காத்திருந்து 50க்கும் மேற்பட்டோர் அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைகளால் ஊட்டச்சத்து பொக்கிஷம் பெட்டகம் என்கின்ற தலைப்பில் 10 பொருட்களை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு வழங்கினார். 10 பொருட்களை 50 நபர்களுக்கு, அதுவும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்க, நேற்று முன்தினம் மாலை முதலே, நிர்வாக காரணம் என்று காட்டி, அந்த தாய்மார்களை அழைக்கழித்ததோடு, காலை 8 மணி முதல் அதே நிர்வாகம் காரணம் காட்டி, மதியம் 12.30 மணியளவு வரை காக்க வைத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பயனாளிகள் அதிருப்தியடைந்தனர்.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.