‘நான் உன்ன விட்டு எங்கயும் போகல’ – விஜயகாந்த் குரலில் அருள்வாக்கு சொன்ன சாமியார்.. கண்கலங்கிய பிரேமலதா!!

Author: Babu Lakshmanan
16 January 2024, 9:13 pm

விஜயகாந்த் மறைவு குறித்து சாமியார் ஒருவர் அருள்வாக்கு கூறியதை கேட்டு அவரது மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா கண்கலங்கினார்.

கடந்த 28ம் தேதி தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். தொடர்ந்து, பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் திரையுலக பிரபலங்களின் அஞ்சலிக்கு பிறகு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக, விஜயகாந்தின் நினைவிடத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வந்தார். அப்போது, அங்கு இருந்த சாமியார் ஒருவர், காசி விஸ்வநாதர் தன் கனவில் தோன்றி, விஜயகாந்த் சமாதிக்கு சென்று சங்கு ஊதும்படி கூறியதாகவும், அதனாலேயே இங்கு வந்ததாகவும் கூறினார்.

மேலும், கேப்டன் எங்கும் போகவில்லை என்றும், உங்கள் மூத்தமகன் உருவில் உங்களுடன் இருப்பதாக கூறிய அவர், திடீரென விஜயகாந்த் குரலில் பேசினார். “என்னை பத்தி தெரியுமில்ல? இந்த ஏழை எளிய மக்களை விட்டுட்டு நான் எங்க போகப்போறேன். பிரேமா உன் இதயத்தில்தான் நான் குடியிருக்கிறேன். நான் உன்ன விட்டு எங்கயும் போகல,” என கூறினார். இதைக் கேட்டு பிரேமலதா விஜயகாந்த் கண்கலங்கினார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 386

    0

    0