மழை பெய்தால் SHOE போட்டுட்டு வந்திருவாரு… இப்ப ஆளைவே காணோம் ; CM ஸ்டாலின் குறித்து பிரேமலதா விஜயகாந்த் கிண்டல்!!!

Author: Babu Lakshmanan
15 November 2023, 3:55 pm

சென்னையில் மழை, சென்னையில் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கின்றது குண்டும் குழியுமான சாலைகள், சுகாதாரம் கிடையாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தார்.

அப்போது அங்கு செய்திகளை சந்தித்த அவர் கூறியதாவது ;- தென் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொலைகள் நடைபெற்று வருகிறது. இது குறித்த கேள்விக்கு? மனது வேதனையான விஷயம். தூத்துக்குடியில் கிராம வருவாய் அலுவலர் படுகொலை செய்யப்பட்ட போது, வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறினேன். தற்போது கனிம வள கொள்ளை மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. கொலைகள் நடைபெறுவதற்கு முக்கியமான காரணம் அதுதான்.

தீபாவளி அன்று டாஸ்மாக் வருவாய் 500 கோடி அளவில் விற்பனையாகிறது. இதை விட ஒரு தலைகுனிவு வேறு ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் எந்த அளவுக்கு குடிக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று பள்ளி விவரம் கூறியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.. நிச்சயமாக தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். தேர்தல் வருவதற்கு முன்பு அது பண்ணுகிறோம், இது பண்ணிகிறோம் என்று ஆயிரம் கூறினர். இப்போது என்ன பண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஒன்றும் பண்ணவில்லை, ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை.

சென்னையில் மழை, சென்னையில் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. குண்டும் குழியுமான சாலைகள், சுகாதாரம் கிடையாது.. குண்டும் குழியுமான சாலைகள் மெட்ரோ ட்ரெயின் ஒரு பக்கம் அது இல்லாமல் மழை நீர் வடிதல் ஒரு பக்கம் எல்லா பக்கமும் தோண்டி போடப்பட்டு இருக்கிறது. அவ்வளவு சிரமம் இருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டிய அரசு இதற்கு முன்னாடி ஸ்டாலின் மழை என்றால் ஒரு சூ மாட்டிக் கொண்டு கரெக்ட்டா சுத்திட்டு போயிடுவார். தமிழில் ஒரு பழமொழி உண்டு அர்ப்பணனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைப்பிடிப்பார்கள் என்று, சொல்றது ஒன்று செயல்பாடு ஒன்றா?, என்றார்.

நீட் குறித்து பேசுகையில், உதயநிதி ஒருத்தர் தான் நீட்டையே பிடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியா முழுக்க நீட் ஒழிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெளிவாக சொல்லியிருக்கிறது. மாணவர்கள் தெளிவாகி விட்டார்கள். இந்தியாவில் நம்பர் ஒன் தமிழ்நாட்டு மக்கள் வாங்குவார்கள். தமிழக மாணவர்கள் அறிவாளிகள் அவர்களை ஏன் குழப்புகிறீர்கள்? அமைதியாக உங்கள் வேலையை பாருங்கள் மாணவர்களை குழப்பாதீர்கள், எனக் கூறினார்.

மாதம் ஆயிரம் உரிமை தொகை பற்றி பேசுகையில், “எந்த பெண்ணாவது ஆயிரம் மாதம் கொடுங்கள் என்று கேட்டார்களா..? எந்த பெண்ணும் கேட்கவில்லை. ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் தருவோம் என்று சொல்லி விட்டீர்கள். ஆனால், இப்போது கொடுக்க முடியவில்லை தேர்தலில் ரிசல்ட் எதிரொலிக்கும், என்றார்.

உதயநிதி சனாதனம் குறித்து பேசுகையில், குப்பிற விழுந்தாச்சி மீசையில் மண் ஓட்டவில்லை. இதற்கு அதுதான் பதில். இந்தியா முழுக்க எவ்வளவு எதற்கு என்று அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். மதம், ஜாதி உணவு பழக்கம் பற்றி யாரும் பேசக்கூடாது. அவரவர்களுக்கு ஒரு கலாச்சாரம் உள்ளது, எனக் கூறினார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவர் பேசியதாவது :- ஜனவரி மாதம் யாருடன் கூட்டணி எந்த தொகுதி எத்தனை வேட்பாளர் என்பதை அதிகாரப்பூர்வமாக விஜயகாந்த் அறிவிப்பார், என்றார்.

  • meiyazhagan Movie OTT audience VS Theater audience மெய்யழகன்: ஓடிடி vs தியேட்டர் Audience Problem?
  • Views: - 371

    0

    0