பிரேமலதா வைத்த கோரிக்கை… எல். முருகன், அண்ணாமலை கொடுத்த நம்பிக்கை : பாஜகவுடன் கூட்டணி போடும் தேமுதிக?!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2023, 5:54 pm
Quick Share

பிரேமலதா வைத்த கோரிக்கை… எல். முருகன், அண்ணாமலை கொடுத்த நம்பிக்கை : பாஜகவுடன் கூட்டணி போடும் தேமுதிக?!

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பிரேமலதா விஜயகாந்த், மீனவர்களுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அவர், கடந்த வாரம் அண்ணாமலையையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனையும் எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பாக தொடர்பு கொண்டு பேசியதாகவும் அப்போது சி.பி.சி.எல். நிறுவனம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உரிய கேபினட் அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததாகவும் கூறியுள்ளார்.

நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அண்ணாமலையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் தனக்கு உறுதி கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்க மிக அதிக வாய்ப்புகள் இருப்பது தெரிய வருகிறது.

மத்திய இணை அமைச்சரிடம் கோரிக்கை வைப்பதில் கூட லாஜிக் உள்ளது, ஆனால் தன்னை போல ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள ஒருவரிடம் கோரிக்கை வைத்தேன் என பிரேமலதா கூறியதிலிருந்து அவர் எந்த திசையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

  • பிரபல நடிகையுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த்…. இதுக்கெல்லாம் கோபிக்கலாமா!
  • Views: - 320

    0

    0