ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் குடியரசுத் தலைவர் அவமதிக்கப்படுகிறார் : கனிமொழி குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2023, 8:25 pm

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் குடியரசுத் தலைவர் அவமதிக்கப்படுகிறார் : கனிமொழி குற்றச்சாட்டு!!

திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடக்கும் இந்த மாநாட்டில் தேசியளவிலும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே என பல தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய திமுக எம்பி கனிமொழி பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மகளிர் உரிமை மாநாட்டிற்கு நூற்றாண்டு கால வரலாறு உண்டு.

இந்தியாவில் முதல்முறையாக காவல்துறையில் தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது. படிக்கும் ஆர்வமுள்ள பெண்களுக்குக் கைதூக்கிவிட அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

மகளின் முன்னேற்றத்திற்காக உரிமை தொகை வழங்கப்படுகிறது.. பாஜக ஆட்சியில் எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை; அதற்கு மணிப்பூர் உதாரணம்.. அங்கே பெண்கள் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளனர் என்பதை நாங்களே நேரில் சென்று பார்த்தோம்.

இதே பாஜக குஜராத்தில் செய்த அட்டூழியங்களாலும் பாதிக்கப்பட்டது பெண்கள் தான். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் குடியரசுத் தலைவரே அவமதிக்கப்படுகிறார்.

கோயில் முதல் நாடாளுமன்றம் வரை எங்கும் குடியரசுத் தலைவரையே இவர்கள் அனுமதிப்பதில்லை. புதுச்சேரியில் பட்டியலின பெண் என்பதால் அமைச்சரே ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

11 பெண் மேயர்களை கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.. பாஜக கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வராது.. தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள்.. பாஜக ஆளும் மாநிலங்களில் வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.

நாங்கள் உங்களிடம் வந்து யாசகம் கேட்கவில்லை எங்கள் உரிமைகளைக் கேட்கிறோம். அதற்குப் பெண்களான நாம் வலிமையாகக் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் தெரிவித்தார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 383

    0

    1