காங்கிரஸ் பிரமுகருக்கு ஜனாதிபதி பதவி… தமிழகத்தை சேர்ந்தவருக்கு துணை ஜனாதிபதி பதவி : பாஜகவின் மாஸ்டர் பிளான்!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2022, 1:58 pm

நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை மாதம் 24-ந் தேதி நிறைவடைகிறது. இதனால் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

ஜனாதிபதி தேர்தலானது எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களின் மறைமுக வாக்குகள் மூலம் நடைபெறும். தற்போதைய நிலையில் லோக்சபா எம்.பிக்கள் எண்ணிக்கை 233. ராஜ்யசபா எம்.பிக்கள் எண்ணிக்கை 543. அனைத்து மாநிலம், யூனியன் பிரதேச எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 4120. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஒரு எம்.பியின் வாக்கு 708 மதிப்பு கொண்டது. எம்.எல்.ஏக்களின் வாக்குகள் மாநிலங்களின் அடிப்படையில் கூடுதலாக, குறைவாக இருக்கும். எம்.எல்.ஏக்களின் வாக்குகள் சராசரியாக 208 என்ற மதிப்பு கொண்டது. இதனடிப்படையில் தற்போது எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் மதிப்பு மொத்தமாக சுமார் 11 லட்சமாக உள்ளது. இதில் ஜனாதிபதி வேட்பாளர் 50% வாக்குகளைப் பெற வேண்டும்.

5 மாநில தேர்தலுக்கு முன்பு வரை பாஜகவுக்கு சுமார் 4.5 லட்சம் வாக்குகள் இருந்தன. அதாவது 5 மாநில தேர்தலுக்கு முன்பு வரை பாஜகவுக்கு 398 எம்.பிக்கள், 1,500 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இதனால் பாஜக, ஜனாதிபதி வேட்பாளராக ஒருவரை நிறுத்தினாலும் மாநில கட்சிகள் சிலவற்றின் ஆதரவை பாஜக பெற வேண்டிய நிலை இருந்தது.

இந்தநிலையில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்தலாம் என வியூகம் வகுத்திருந்தனர். தேசியவாத காங்கிர1 தலைவப் சரத்பவாரை நிறுத்தலம் என பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கருத்தை முன் வைத்தன.

ஆனால் 5 மாநில தேர்தல் முடிவகள் எதிர்க்கட்சிகளின் கனவை தவிடுபொடியாக்கிவிட்டன. பஞ்சாப் மாநிலம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்றதால், மற்ற கட்சிகளின் தயவின்றி ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் எளிதாக வெற்றி பெறும் சூழல் உருவாகியது.

இந்த நிலையில் யார் அடுத்த ஜனாதிபதி, துணை ஜனாதிபதி என்பதை பாஜக மேலிடம் எப்போதே டிக் செய்துவிட்டது. அந்த தகவல் தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது.

குறிப்பாக ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவரை தேர்ந்தெடுத்துள்ளது சோனியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியாவின் குடும்பத்துக்கு கொடுக்க கூடாது என்று குரல் கொடுத்த 23 காங்கிரஸ் மூத்த தலைவர்களில் முதலாவதாக குரல் கொடுத்தவர் இவர்.

G23 தலைவர்களில் டாப் லிஸ்ட்டில் உள்ள அந்த தலைவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளது சோனியாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சோனியா யாரை வைத்து ஜம்மு காஷ்மீர் மாநில பிரச்சனையின் போது குரல் கொடுத்தாரோ அவரையே பாஜக ஜனாதிபதியாக நிறுத்தி வைத்துள்ளது உற்று கவனிக்க வேண்டியதாக உள்ளது.

அதே போல, கன்னியாகுமரியை சேர்ந்த பிரபலம், தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு, காஷ்மீர் வரை தனது குரலை உயர்த்தி பேசியவர். ஏற்கனவே இவருக்கு இரு மாநிலத்தில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு துணை ஜனாதிபதி பதவி அளிக்க உள்ளது தமிழகத்திற்கு பெருமைதான். அதே போல இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு ஒரு பக்கம் பெருமை என்றாலும், இந்த பதவிக்கு பின் அவர் அரசியல் ஈடுபட முடியாது என்பது விதியாகும்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1408

    0

    0