சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக காவலர்களுக்கு ஜனாதிபதி விருது : 21 காவலர்கள் தேர்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2023, 1:25 pm

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக காவலர்களுக்கு ஜனாதிபதி விருது : 21 காவலர்கள் தேர்வு!!

சுதந்திர தினம் நாளை (15-ந் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒட்டு மொத்த நாடும் விழாக்கோலம் பூண்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றுகிறார்.

அதைபோல சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி உரை நிகழ்த்த உள்ளார். தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சுதந்திர தினத்தையொட்டி சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஐ.ஜி.பவானீஸ்வரிக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைபோல பெரம்பலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மதியழகன், தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜூ உள்ளிட்ட 19 பேருக்கு ஜனாதிபதியின் மெச்சத்தக்க சேவைக்கான விருது வழங்கப்படுகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!