சுதந்திர தினம்; தேசியக் கொடியுடன் செல்ஃபி; பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை

Author: Sudha
28 July 2024, 3:45 pm

வானொலி வழியாக நாட்டு மக்களிடையே பாரதப் பிரதமர் உரையாற்றும் ‘மன் கி பாத் ‘ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஒலிம்பிக் போட்டியில் நமது தேசியக் கொடியை உலகளவிற்கு எடுத்து செல்லவும், நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் நமது வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களை நீங்கள் உற்சாகப்படுத்த வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 100 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் இந்திய அணி 5வது இடத்தை பிடித்து உள்ளது.
வருகிற ஆகஸ்ட் மாதம் 15 சுதந்திர தினத்தன்று, கடந்தாண்டை போல் இந்தாண்டும் தேசியக் கொடியுடன் செல்பி எடுத்து சமூகவலைதளங்கள் மற்றும் ஹர்ஹர் திரங்கா இணையத்தில் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்வதாக பிரதமர் மோடி உரையாற்றினார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?