‘நீங்க இங்க வாங்க’… தள்ளி நின்ற முதலமைச்சரை அழைத்த பிரதமர் : வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் சுவாரஸ்யம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2023, 5:02 pm
PM Modi CM - Updatenews360
Quick Share

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

அவரை முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவி, மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர், சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

தொடர்ந்து அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் இருந்து பிரதமர் மோடி காரில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் புறப்பட்டு சென்றார்.

பிரதமர் மோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடைந்தனர். பின்னர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை – கோவை இடையேயான ‘வந்தே பாரத்’ ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக தள்ளி நின்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலினை பக்கத்தில் அழைத்து பேசிய பிரதமர் மோடியின் காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த பின் பிரதமர் மோடி விவேகாந்தர் இல்லம் நோக்கி காரில் புறப்பட்டார்.

மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். அங்கு நடைபெறும் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு வந்தடைந்தார். விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 344

    0

    0