பிரதமர் மோடியின அமைச்சரவை… 12 மத்திய அமைச்சர்கள் : அந்த 2 பேர் மட்டும்… அண்ணாமலை சொன்ன தகவல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2023, 9:39 am

பிரதமர் மோடியின அமைச்சரவை… 12 மத்திய அமைச்சர்கள் : அந்த 2 பேர் மட்டும்… அண்ணாமலை சொன்ன தகவல்!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நல்லாட்சியில், நாடு முழுவதும் அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய முக்கியத்துவமும் பிரதிநிதித்துவமும் கிடைக்கப்பெற்று வருகின்றன.

நமது நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளில், பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அமைச்சரவையில்தான், அருந்ததியர் சமூகத்திற்கும் மாதிக சமூகத்திற்கும், பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது.

இரு பெரும் சமூகத்தின் பிரதிநிதிகளாக மாண்புமிகு மத்திய இணையமைச்சர்கள் அண்ணன் எல்.முருகன் அவர்களும், திரு. A. நாராயணசுவாமி அவர்களும், மத்திய அமைச்சரவையை அலங்கரிக்கிறார்கள்.

மத்திய அமைச்சரவையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள். பட்டியல் சமூக மக்கள் முன்னேற்றத்திற்காக, மத்திய அரசின் இந்த ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீடு, 1.59 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

ஆண்டு தோறும் இந்த ஒதுக்கீடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் பட்டியல் சமூக மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெறும், மாதிக சமூக மக்களின் விஸ்வரூப மகாசபா மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 277

    0

    0