10 வருஷமா ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாத பிரதமர்.. ஓம் பிர்லாவுக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன்!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2024, 2:49 pm

புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களிலும் அனல் பறந்தன.இந்தநிலையில் சபாநாயகர் ஓம்பிர்லா தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு சென்றார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓம்பிர்லா, “பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தது ஜனநாயகம் செழிப்பாக இருப்பதை காட்டுகிறது. இது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பாராளுமன்ற விவாதம் தெருச்சண்டை போல் இருக்கக்கூடாது. பாராளுமன்ற விவாதத்துக்கும், தெருக்களில் நடக்கும் விவாதத்துக்கும் வித்தியாசத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று பேசியுள்ளார்.ஓம்பிர்லாவின் இந்த கருத்து தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், “எதிர்க்கட்சிகள் முழு பலத்துடன் நாடாளுமன்றத்தை பயன்படுத்த துவங்கியதும், விவாதம் தெருச்சண்டை போல் இருக்க கூடாது என்கிறார் ஓம் பிர்லா.

10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாத பிரதமரை பார்த்து பேசப் பழகுங்கள் அவைத்தலைவரே என்று தெரிவித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!