சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி.. அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2023, 1:03 pm

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய வகையில் புதிய முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்துவருகிறது.
இதற்கான ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டுள்ளது. கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிராஸ் காஸ்ட் காண்ட்ரக்ட் முறையில் இந்த பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்து கழகத்தின் முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து நாளை அரசு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.மாநகர போக்குவரத்து கழகத்தை கண்டித்து பணிமனைகள் முன்பு நாளை போராட்டம் நடத்தப்படும் என சி.ஐ.டி.யு . அறிவித்துள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ